விஜய்க்கு வேற வேலையே இல்ல…வாய்க்கு வந்ததை பேசுவாரு : அமைச்சர் பொன்முடி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2025, 7:42 pm

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் வன அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

இதையும் படியுங்க: எங்களை கொலை பண்ண பிளான் போட்டிருக்காங்க… போலீசிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

இந்த ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அரசு செயலாளர் செந்தில்குமார்,
முதன்மை வன அலுவலர் ஸ்ரீனிவாஸ் ராவ் ரெட்டி, முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரி பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் தெபாஷீஷ் ஜனா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Minister Ponmudi Criticized TVK Leader Vijay

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியது அமைச்சர் பொன்முடி:
வனவிலங்குகளை பாதுகாப்பது, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது, குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கபட்டதாகவும், வனவிலங்கு பட்டியலில் உள்ள காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு உள்ளதால் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் காட்டுப்பன்றி வந்தால் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை இல்லாத பகுதிகளில் காட்டுப்பன்றி வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Minister Ponmdui

காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு மாநில அளவில் 28 ஆம் தேதி துப்பாக்கி சுட வன அலுவலர்களுக்கு பயிற்சி கோயம்புத்தூரில் அளிக்கபட உள்ளதாக கூறினார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசும், மத்திய அரசும் இணைக்கமாக செயல்படுவதாக நாடகம் போடுவதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி அவர் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டு இருப்பார் என தெரிவித்தார்.

  • Sardar 2 Music Director Change திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!