அரசுப் பள்ளி மாணவிகளுடன் நடனமாடிய அமைச்சர் பொன்முடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2023, 6:54 pm
அரசுப் பள்ளி மாணவர்களுடன் நடனமாடிய அமைச்சர் பொன்முடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் பேனா சின்னம் மெரினா கடற்கரையில் அமைக்கபட உள்ளது. இதனையொட்டி மாதிரி நினைவு பேனா தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிற நிலையில் கலைஞர் நினைவு சின்னமான பேனா விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்தது.
விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்ட பேனா நினைவு சின்னத்தை அமைச்சர் பொன்முடி, எம் பி கெளதமசிகாமணி ஆட்சியர் பழனி, மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி,லட்சுமணன் உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர்.
முத்தமிழ் தேர் என பெயரிடப்பட்டுள்ள பேனா சின்னத்தை அமைச்சர் பொன்முடி, கெளதமசிகாமணி சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது பேனா நினைவு சின்னத்தின் முன் பொதுமக்கள் செல்பி எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அரசு பள்ளி மாணவிகளின் நடனத்தை கண்ட அமைச்சர் பொன்முடி மாணவிகளின் நடனம் முடிந்த பிறகு அவர்களுடன் மேடையிலையே உற்சாகமடைந்த பொன்முடி மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.
பள்ளி மாணவிகளுடன் நடனமாடிய அமைச்சர் பொன்முடி!#Ministerponmudi #School #Students #Dance #viralvideo pic.twitter.com/ZTyPUgdivn
— UpdateNews360Tamil (@updatenewstamil) December 2, 2023
அதனை தொடர்ந்து மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் பொன்முடி கலைஞரின் நினைவு பேனா சின்ன வரவேற்பில் மாணவிகளுடன் இணைந்து நடனமாடியது அனைவரின் மத்தியில் வரவேற்பினை பெற்றது.