பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 4:08 pm

விழுப்புரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் நகர திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு உயிர்களைத் துறை அமைச்சர் பொன்முடி இல்லம் அருகே சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோல போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அப்போது நிகழ்ச்சியின் துவக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் பறை இசை வாசிக்கப்பட்ட போது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், திமுக விழுப்புரம் நகர செயலாளர் சர்க்கரை ஆகியோர் பறை இசைக்கு குத்தாட்டம் போட்டனர். இந்த நிகழ்ச்சி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

  • Aishwarya Rajinikanth upcoming project ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!