காலாவதியானது திராவிடம் அல்ல… ஆளுநர் பதவி தான்.. ஆளுநர் ஆர்என் ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 4:45 pm

திராவிடம் வந்த பிறகு தான் சனாதனம் என்று ஒன்று காலாவதியானது என்றும், ஆகையால் காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே என அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்முதுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் முதலாண்டு ஆண்டு மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சென்னை கிண்டியில் தொழில் நுட்ப இயக்ககம் சார்பாக பொறியியல் படிப்புக்கான உதவி மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது :- 05.05.2023 முதல் 4.06 2023 வரை இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம். 2023-24 கல்வியாண்டில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதிகளும், விதிமுறைகளும் இன்று அறிவிக்கப்படுகின்றன.

இந்த கலந்தாவின் மூலம் இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு பொறியியல் சேவை மையங்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான சான்றுகள் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 446 இடங்கள் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 7 ஆயிரத்து 996, மாணவர்களின் சேர்க்கை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 259 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

31.6.23 க்கு பிறகாக அட்மிஷன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் ஏழாம் தேதி பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படும். பொறியியல் படிப்பில் சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 2 முதல் 5ம் தேதி வரை நடைபெறும். 09.06.23 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்.

ஜூன் ஏழாம் தேதி பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. பொறியியல் படிப்பில் சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 2 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு மாற்று திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு பிரிவினருக்கானா கலந்தாய்வு 2.8.23 முதல் 5.8.23 வரை நடைபெறும்.

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இணையதள வாயிலாக செப்டம்பர் 26 முதல் 29 வரை நடைபெறும். பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு அக்டோபர் 3ஆம் தேதி நிறைவு வரும். உயர்கல்வித்துறையில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் உள்ளது. புதுமை பெண் திட்டத்தின் கீழ் எடுக்கபட்ட முயற்சியில் பல பெண்கள் கல்வி வளர்ச்சியில் முன்னேறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது தமிழ்நாட்டின் கல்வி நன்றாக உள்ளது எனவே பலமுறை ஆளுநர் பேசியுள்ளார். ஆகையால் தவறாக கூறிவரும் ஆளுநரை நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் நிரூபித்து காட்ட சொல்லுங்கள். மாநில அரசு என்ன சொல்கிறதோ, அதன் அடிப்படையில் செயல்படுத்துவது ஆளுநரின் வேலை.

திராவிடம் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்திற்கே ஏற்ற ஒரு கொள்கையாகும். திராவிடம் வந்த பிறகு தான் சனாதனம் என்று ஒன்று காலாவதியானது. ஆகையால் காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே, என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 428

    0

    0