எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. கேக்க வந்துட்டீங்க : கிராம மக்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடி..(வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 7:39 pm

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து கோடி மதிப்பிலான பாலம் மற்றும் அரசு பள்ளியில் நடைபெற்ற சுற்று சுவர் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.

அப்போது தான் சட்டமன்ற உறுப்பினராக ஆன பின்பு அருங்குறிக்கை கிராமத்திற்கு பல்வேறு பணிகள் செய்ததாகவும் பொது அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் தங்கள் பகுதிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பேசினார்.

இதனால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தியது தொடர்ந்து தொகுதி மக்களிடையே அமைச்சர்புடி காட்டமாக பேசி வருகிறார்.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சுதாரித்துக்கொண்ட அமைச்சர், பொதுமக்கள் உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?