அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!
Author: Udayachandran RadhaKrishnan11 April 2025, 11:05 am
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை கிளப்பிவிடும்.
அந்த வகையில் அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவ, வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதையும் படியுங்க: திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?
தந்தை பெரியார் திராவிட கழக நிகழ்ச்சியில் பொன்முடி கொச்சையாக பேசியது சர்ச்சையானது. விலைமாது ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையிலான உரையாடல் குறித்து பேசியது சர்ச்சையானது.

இதற்கு கண்டனம் எழுந்து வரும் நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்போது பொன்முடி வகித்து வந்த கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பபடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
