அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் பிடிஆர் : உடன் தொண்டர்களுக்கு பணம் கொடுத்து டிக்கெட்.. மதுரையில் சுவராஸ்யம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 9:35 pm

நிதிஅமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அரசு பேருந்தில் பயணம் செய்த போது தொண்டர்களுக்கு பயணசீட்டு எடுத்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மற்றும் தத்தநேரி பகுதிகளில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டு புதிய பேருந்து வழிதடத்தை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பொதுமக்களுடன் நிதியமைச்சர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பேருந்தில் பயணித்து வந்த திமுக தொண்டர்களுக்கு வேண்டி 510 ரூபாயை பேருந்து நடத்துனரிடம் கொடுத்து பேருந்து பயண சீட்டையும் நடத்துனரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ