மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் ஆர்என் ரவி இழுத்தடிக்க முயற்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் கணக்கீட்டு அறிவியலில் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் சட்டதுறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் துறை சார்ந்த தலைவர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- கணினி அறிவியலின் சிறப்புகளையும், சட்டம் மற்றும் சிறை துறையில் கணினி அறிவியலின் பங்களிப்புகள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தேன். 11 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் இருக்கிறது. கணினி அறிவியல் அடிப்படையானது. கிராமத்தில் இருக்கக்கூடிய விவசாயி குறுஞ்செய்தியை பார்க்கிறார் என்றால், அது கணினி அறிவியலின் தொழில்நுட்ப வளர்ச்சி.
பத்து மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். என்னென்ன காரணங்களுக்காக மசோதாவை திருப்பி அனுப்பினேன் என்று கூறினாரோ, அதற்குரிய தகுந்த விளக்கங்களையும் கூறி மசோதாவை நிறைவேற்றினோம். தற்பொழுது தான் ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலே உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை ? மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்க கூட அதிகாரம் அளிக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், ஒரு குழுவை நியமிக்கிறோம். அதில் ஆளுநரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டிகேட்டின் பிரதிநிதியும் இருக்கிறார். அந்த தேடுதல் குழு தான் மூன்று பேரை பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை ஆளுநர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அனுப்பியிருக்கிறோம், எனக் கூறினார்.
மேலும், சட்டப்பேரவைச் செயலாளருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது என்ற கேள்விக்கு, அரசின் முடிவு விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.