இது நமக்கு கெட்ட நேரம் ; வாதத்திற்கு மருந்துண்டு… பிடிவாதத்திற்கு மருந்தில்லை… அமைச்சரின் பேச்சால் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan24 May 2024, 12:55 pm
கேரளா அரசு அணைக்கட்டு விவகாரத்தில் நீர்வளத் துறையும் முதல்வரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்கள் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும். அதுபோல் நமது கெட்ட நேரம். இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது, திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும். வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
மேலும் படிக்க: முன்னாள் மனைவி கொடுத்த புகார்… வீடு தேடிச் சென்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்த போலீஸார்..!!
இந்தியா கூட்டணி இந்த முறை 300லிருந்து 370 வரை கைப்பற்றி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி எந்த பக்கம் கை நீட்டுவார் என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள். கேரளா அரசு அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
போதை புழக்கத்தை எந்த அளவுக்கு தடுத்து இருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்கள் போதை புழக்கத்தை நடமாட விட்டுவிட்டனர். நாங்கள் அதை தடுத்திருக்கிறோம். நாங்கள் தடுப்பதால் தான் இவ்வளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
எங்களைப் பொறுத்தவரை நிச்சயமாக தமிழ்நாடு முதலமைச்சர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் அறிந்தவர். நிச்சயம் போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம்.
ஒரிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர். தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. இரட்டை நிலைப்பாடு, நாங்கள் எடுப்பது கிடையாது. நாங்கள் என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டார்கள்.
செல்லூர் ராஜுவுக்கு கிடைத்த பாராட்டு மழையினால், அவர் ராகுல் காந்தி குறித்து பதிவிட்ட கருத்தை நீக்கியிருக்கிறார், எனக் குறிப்பிட்டுள்ளார்.