கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா…? உதயநிதியை பார்த்து தமிழிசைக்கு பயம்… அமைச்சர் ரகுபதி ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 1:07 pm

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போது போல் உச்சநீதிமன்றம் சொன்ன பிறகு ஆளுநர் இப்போது அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போது போல் உச்சநீதமன்றம் சொன்ன பிறகு ஆளுநர் இப்போது அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் இப்போது வெள்ள நிவாரண பணிகளில் இருக்கிறார். அது முடிந்த பிறகு தான் அவர் சந்திப்பது குறித்து தெரியும். ஆளுநர் எல்லா மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பின் முதல்வர் ஆளுநர் முதல்வர் சந்தித்து, என்ன பலன் தரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சிறையில் மிகுந்த பாதுகாப்பு உள்ளது, அதனை மீறி சில நேரம் ஒரு சில கைதிகளில் தப்பி விடுகின்றனர். தப்பிச்சென்ற கைதியை விரைவில் நாங்கள் கைது செய்து விடுவோம். முதற்கட்டமாக பார்வையாளர் பகுதி வழியாகத்தான் பெண் கைதி தப்பித்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.

திமுகவிற்கு எப்படி பேச வேண்டும் என்றும் தமிழசை சொல்லித்தர வேண்டியதில்லை. எப்படி பேச வேண்டும் எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பது இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியும். அவர் தைரியமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அதனை கண்டு அச்சமடைவதால் தமிழிசை சௌந்தர்ராஜன் இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பதவியேற்ற பின்னர் தான் ஆளுநர்கள் அரசியல் பேசுகின்றனர். தற்போதும் தமிழக பாஜகவின் மாநில தலைவராக தான் தமிழிசை சௌந்தரராஜன் தன்னை கருதிக் கொண்டு பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். உயர் பாதுகாப்புகள் நிறைந்த நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. எந்த அமைப்பு விசாரணை செய்தாலும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான விசாரணையை உரிய முறையில் மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாஜக எம்பி அவர்களுக்கு கடிதம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் நடந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்தார்கள் என்பது வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இது போன்ற சம்பவம் நடந்த பின்னல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோன்று 2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெறும். சிறைச்சாலைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கைதிகள் தங்களுடைய குடும்பத்தாருடன் பேசுவதற்கு உண்டான வசதிகளை எடுத்து வருகிறோம். கைதிகள் தங்களுடைய குடும்பத்தார்கள் எப்படி உள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் உரிய மன அழுத்தத்தை குறைப்பதற்கும் இது நிச்சயம் உதவும், என தெரிவித்துள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 372

    0

    0