அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அதிமுக ஒன்றும் யோக்யமான கட்சியில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று (டிச.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்துவிட்டது. இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் தமிழக முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ கிடையாது.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஆனால், சில ஊடகங்களிலே, அந்த நபர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது போலவும், மாணவரணியின் துணை அமைப்பாளர் என்பது போலவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தென் சென்னை, சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் திமுக மாணவரணிக்கான துணை அமைப்பாளர்களோ, அமைப்பாளர்களோ இன்னும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மட்டும்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஊடகங்களில் வரும் செய்திகளில், துணை முதல்வர் உடன் கைது செய்யப்பட்ட நபர் இருப்பது போன்ற காட்சியை வெளியிடுகிறார்கள். அந்தச் காட்சியை பார்த்தாலே தெரியும். துணை முதல்வர் நடந்துவரும் போது ஒருவர் புகைப்படம் எடுக்கிறார்.
அவ்வாறு நடந்துவரும் போது புகைப்படம் எடுப்பது எங்கேயும் சகஜம்தான். அதை தடுக்க முடியாது. அதேபோல, இன்னொரு புகைப்படம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியிடப்படுகிறது. அவர் சைதாப்பேட்டை தொகுதியைச் சேர்ந்தவர்,
அத்தொகுதியைச் சேர்ந்த பலர் அவரைச் சந்திக்கவும், நன்றி தெரிவிக்கவும் வந்திருப்பார்கள், புகைப்படம் எடுத்திருப்பார்கள். இதை யாரும் தடுக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதால், உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை துரிதமான விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில், நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். இது பொள்ளாச்சி வன்கொடுமை போன்ற சம்பவம் அல்லை. அந்தச் சம்பவத்தில் ஒரு முக்கியப் பிரமுகரின் மகனே ஈடுபட்டிருந்தார். அதை மறைக்க அன்றைக்கு ஆட்சியாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இறுதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எனவே அதிமுக ஒன்றும் யோக்யமான கட்சியில்லை. அந்த சம்பவத்தை அவர்கள் மறைக்க முயற்சித்தார்கள். ராமேசுவரத்தில் அதிமுக நிர்வாகியின் மருமகன் ராஜேஸ்கண்ணா என்பவர் பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமராவை வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் அந்த வீடியோவை வைத்து யாரையும் மிரட்டினாரா? அல்லது வியாபாரம் செய்தாரா? என்பதெல்லாம் தெரியவரும்.
எனவே, இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் அதிமுகவினர் தானே தவிர நாங்கள் இல்லை. தவறு செய்பவர்கள் மீது உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்துவிடும். அதேபோல், பாஜகவைப் பற்றியும் பல சம்பவங்களை நாங்கள் கூற முடியும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022ம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதையும் படிங்க: எப்படி வெளியானது.. வெகுண்டெழுந்த எதிர்ப்புகள்.. FIR-ஐ முடக்கிய காவல்துறை!
அந்த அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் லட்சத்துக்கு 65 என்றால், தமிழகத்தில் 24 சம்பவங்கள் மட்டுமே என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தேசிய சராசரி 4.6%, அதில் தமிழகத்தின் சராசரி 0.7% மட்டுமே.
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பல பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடைபெற்றுள்ளது. காஷ்மீர் சிறுமி ஆசீஃபாவை வன்புனர்வு செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்களே பேரணி நடத்தினார்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது” எனத் தெரிவித்து உள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.