அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி ; கரூரில் பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
14 June 2023, 10:44 am

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரூரில் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவர் சகோதரர் அசோக்குமார், நண்பர்கள் என அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நேற்று காலை எட்டு மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர்.

சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்பு படை உதவியுடன் சோதனை ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு அளித்துள்ளார்.

மேலும், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!