அதுக்கு வாய்ப்பே இல்ல.. ஆனா, கிரிக்கெட் மேட்ச்களில் கூட … அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன தகவல்!!

Author: Babu Lakshmanan
24 April 2023, 12:40 pm

கோவை ; திருமண மண்டபங்களில் மது பயன்பாடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது ;-திருமண மண்டபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அது போன்ற அனுமதி வழங்கப்படாது. எந்த நிகழ்ச்சிகளிலிலும் மதுபானங்கள் பயன்படுத்த அரசு அனுமதிக்காது. மேலும் ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்பதற்கும், சொத்து பட்டியலை வெளிவிடுவேன் என்பதற்கு வித்தியாசம் உள்ளது. குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் வெளியீடு செய்துள்ளார்.சொத்துக்கள் அனைத்திற்கும் கணக்கு உள்ளது, எனவும் கூறினார்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!