ஆடு மேய்த்து அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு ரூ.1000 கொடுத்தாரா? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan17 ஜூன் 2022, 4:20 மணி
அண்ணாமலை ஒரு படித்த முட்டாள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
கோவை மாநகராட்சியில் சாலை விரிவாக்கம் செய்தல், புதிய சாலை அமைத்தல், நகர் நலத்தின் புதிய கட்டிட பணிகள், குடிநீர் தொட்டி கட்டுவது உள்ளிட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 19.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, பொதுமக்கள் பயன்படுத்த முடியாது இருந்த பல்வேறு சாலைகள் 1 ஆண்டில் மட்டும் 198 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகள் கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரத்தில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி தொடங்கி வைக்கப்பட்டன. இன்று சாலை விரிவாக்க செய்தல், புதிய சாலை அமைத்தல், நகர் நலத்தின் புதிய கட்டிட பணிகள், குடிநீர் தொட்டி உள்ளிட்ட பணிகளுக்கு ரூபாய் 38 கோடி மதிப்பலான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டு அதே போல் விடுப்பட்ட சாலைகள் அமைக்க மாநகராட்சியின் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சியை பொருத்தவரை அனைத்து சாலைகளும் புதிதாக சீரமைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சாலைகள் என்ற நிலையை முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கறந்த பால் மடி புகாது என்பது போல் நீங்கள் சொன்னவரின் கனவு பலிக்காது. நோட்டா உடன் போட்டி போடுபவர்கள் இவர்கள்.
வீரவசனம் பேசக்கூடிய அண்ணாமலை அரவக்குறிச்சியில் ஏன் மண்ணை கவ்வினார். மக்கள் ஏன் விரட்டி அடித்தார்கள். தொடர்ந்து நேரலையில் வர வேண்டும் என்பதற்காக கருத்து சொல்கிறார். கோவையில் 100 வார்டில் எவ்வளவு முயற்சி எடுத்தார்கள். ஜெயிக்க முடிந்ததா. நான் நேரத்தை வீணடித்து பதில் சொல்ல விரும்பவில்லை. நடவடிக்கை எடுப்பது என்றால் இப்போது கூட எடுக்கலாம் அல்லவா.
அண்ணாமலை அரவக்குறிச்சியில் ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு பணம் கொடுத்தார் அல்லவா. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது. இவர் காவல்துறையில் பணியாற்றி சம்பளம் வாங்கி அந்த சம்பளத்தை சேர்த்து வைத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாரா.? அல்லது ஆடு மேய்த்துக் கொடுத்தாரா..?
நேர்மையான அதிகாரி போல மாயத்தோற்றம் உருவாக்குகிறார். எதனால் வேலையை விட்டு வந்தார் மக்களுக்கு சேவை செய்ய வா.? எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது. நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம்.
143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்து உள்ளோம். இது முதல்வர் எடுத்த நடவடிக்கை. இதுவே பிஜேபி ஆளும் மாநிலங்களில் எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
தினமும் யாரையாவது குறை சொல்ல வேண்டும். டிவியில் லைவ்வில் வரவேண்டும் என பேசி வருகிறார். நிலக்கரி தட்டுப்பாடு இருந்த சூழலில் கூட தடையில்லாத மின்சாரம் கொடுத்தோம். ஏன் பிஜேபி ஆளும் குஜராத்தில் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவித்தார்கள்.
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதியில் தளபதி அறிவிக்கின்ற வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இந்தியாவை ஆளக்கூடிய பாரதப் பிரதமரை தீர்மானிக்கக் கூடிய இடத்தில் தளபதி உள்ளார்.
அரசியல் சார்ந்து எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தமிழகத்தில் மக்கள் பிரச்சினையை எடுத்து வந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அது போன்ற கருத்துக்கள் சொல்லாமல் செய்திகள் வரணும் மாற்றுக்கருத்து வரணும் என இருக்கிறார்.
படித்த முட்டாள் அதிமேதாவியை கேட்கிறேன். அணில் போன்ற உயிரினங்களால் மின்வினியோகங்களில் பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா..?இணையதளத்தில் தேடி பார்க்கவும். பின்னர் கருத்து சொல்லவும்.
விளம்பரத்துக்கும் வேலைக்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் சொன்ன நபர்
வெட்டி விளம்பரத்தில் உள்ளார். பாஜக பிரதான கட்சி என்பதற்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அண்ணாமலை மட்டரகமான அரசியல்வாதி. தரம் தாழ்ந்த அரசியல் வாதி பேச்சுக்கு பதில் சொல்லி நேரத்தை வீன் பண்ண வேண்டாம். மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலுக்கு மத்திய தேர்தல் ஆணையம் என பதிவு போட்டவர். ஒன்னாம் நம்பர் படித்த முட்டாள். இவ்வாறு தெரிவித்தார்.
0
0