ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மாதாந்திர கட்டணம் வசூலிப்பா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.. அதிருப்தியில் மக்கள்..!!
Author: Babu Lakshmanan26 July 2022, 3:59 pm
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர கரூரில் 41 நான்காவது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிம்பியாட் மாதிரி ஜோதியை மாணவர்கள் எடுத்துச் செல்ல மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரணியை தொடங்கி வைத்து பேரணியுடன் நடந்து சென்றார்.
மாநகராட்சி அலுவலக தொடங்குகின்ற பேரணி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் திடலில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சதுரங்க போட்டியை முன் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர், மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அவற்றுக்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்பட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வளாகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது பொய்யான தகவல். இது எதிர்க்கட்சிகள் மற்றும் சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
வீடுகள், மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும்போது, எந்தவித மாதாந்திர வாடகை கட்டணமும் வசூலிக்கப்படாது. அடித்தட்டு மக்களுக்கு பதிப்புகளை வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் 37 விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும் அதிமுகவினர் காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வை பற்றி பேசவில்லை, என்றார்.