போக்குவரத்து பணியாளர்களின் போனஸ் என்ன ஆனது? முட்டும் ராமதாஸ்.. அமைச்சரின் பதில்?

Author: Hariharasudhan
30 October 2024, 12:01 pm

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகங்கள் சீரழிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 – மார்ச் 2023 வரை ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1,279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை என மொத்தம் 372.06 கோடி ரூபாய் வழங்கிட நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ராமதாஸின் பதிவிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில்,தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரழித்துச் சென்றுள்ள நிலையில், இந்த அரசானது பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 741, C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு, அரசு ஆணை எண்: 310, நிதித் துறை நாள்: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்: 124, போக்குவரத்துத் துறை நாள்: 25/10/2024 ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அஜித்குமார் ஹெல்மெட்டில் தமிழக அரசு லோகோ.. என்ன காரணம்?

இதனை அறிந்தும், அறியாததுபோல ச.ராமதாஸ் அவர்கள் X- தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 173

    0

    0