போலீசை வைத்து மிரட்டும் பொறுப்பு அமைச்சர்… திமுக நிர்வாகிகள் குமுறல்!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2025, 4:01 pm
தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவரின் தனி உதவியாளராக தேவானந்தம் இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்.. வெளியான பகீர் தகவல்!
இந்நிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் ஆய்வாளர் அவர்கள் அமைச்சர் குறித்தும் தேவானந்தம் குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென தருமபுரி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளரான துரைசாமி உள்ளிட்ட மேலும் சிலரை தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.
இன்று காலை விசாரணைக்கு வந்த துரைசாமி மற்றும் அவர் ஆதரவாள்கள் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்ட பொறுப்பாளராக பதவி ஏற்றதிலிருந்து கட்சியை வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவர்களால் கட்சி வளர்ச்சி அடையாமல் உள்ளது.
மேலும் நிழல் அமைச்சராகவும் நிழல் மாவட்ட செயலாளராகவும் இருந்து வரும் அமைச்சரின் நேர்முக உதவியாளர் தேவானந்தத்தையும் தருமபுரி மாவட்டத்திற்கு வரவேண்டாம் என உண்மையான திமுக தொண்டர்கள் ஏராளமானோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம்.
இந்நிலையில் கட்சி தொடர்பான பிரச்சனையை நீங்கள் எங்கள் கட்சி நிர்வாகம் விசாரிக்க வேண்டும் ஆனால் அமைச்சரும் தேவானந்தமும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறை மூலம் எங்களை மிரட்டுகின்றனர்.

கட்சிப் பிரச்சினையை காவல்துறை வரை இவர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஏற்கனவே எம் ஆர் கே பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பேற்ற பின்பு கட்சியில் பல பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது போன்ற செயல்களை செய்து வரும் அமைச்சர் மீதும் தேவானந்தத்தின் மீதும் தருமபுரி மாவட்ட திமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியிலும் கொதிப்பிலும் இருந்துவ இருந்து வருகிறோம் அதனால் தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரையும் அவரது நேர்முக உதவியாளர் தேவ் ஆனந்தத்தையும் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தனர்.
