கருணாநிதி பற்றி பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுத அமைச்சர் டிஆர்பி ராஜா : வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2023, 9:56 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ வ வேலு மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழில்துறை அமைச்சர் வருமான டிஆர்பி ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது.
முதன்முதலாக அமைச்சராக பதவி ஏற்று சொந்த மாவட்டமான திருவாரூருக்கு வருகை தந்த டிஆர்பி ராஜா அமைச்சரான பிறகு முதல் முதலாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேசினார்.
அப்போது அவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து பேசிய பொழுது கண்கலங்கி அழுது மிகவும் உருக்கமாக பேசினார். அப்பொழுது அருகில் இருந்த அமைச்சர் வேலு அவரை தேற்றினார்.
இந்த நிகழ்ச்சி சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அங்கு நெகிழச் செய்தது.