அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்டாலும் தண்டிக்கப்படணும்… கொந்தளித்த கிருஷ்ணசாமி!!!
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு நாள் நிகழ்ச்சி நிகழ்ச்சி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற இருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் 33 வருடங்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி தான் அதை தொடங்கிவிட்டது.
2012 ம் ஆண்டு சில அசம்பாவிதம் நடந்தது.அதனை தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது.கடந்த 2 ஆண்டுகளாக தியாகி இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்கு செல்லும் போது காவல்துறையினர் இடையூறு செய்கிறார்கள். அதனை காவல்துறை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அரசே மதுபானத்தை விற்க ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கள்ளச்சாராயத்தை தடுக்க போகிறோம் நல்ல மதுவை கொடுக்கப் போகிறோம் படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்துகிறோம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள்.
அரசாங்கமே மதுவில் வரக்கூடிய பணத்தை வைத்து தான் அரசை நடத்தக்கூடிய சூழலில் உள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மூடப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள்.
தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி கொடுத்துவிட்டு பட்டி தொட்டி எல்லாம் மதுவை வளர்த்து வருகிறார்கள். கடைசியாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது போல் மூடிவிட்டு 2000க்கும் மேற்பட்ட கடைகளை மீண்டும் திறந்து உள்ளார்கள்.மது பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகிறார்கள் வன்முறை ஏற்படுகிறது.
5362 கடைகளில் உள்ள பார்கள் சட்ட விரோதமாக செயல் படுகிறது. முறையாக பணம் செலுத்தாமல் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள்.
சனாதனம், வருணாசனம் இந்து மதம் என்பது என்ன ஒரு புரிதல் கூட உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. அமைச்சர் உதயநிதிக்கு மதங்கள் குறித்து புரிதல் வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்துவாக இருந்து கொண்டு சனாதனத்தை எதிர்த்து பேசுவது மிகப்பெரிய குற்றம்.
இந்த பிரச்சனைகள் குறித்து நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியவில்லை.
உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பை கேட்டாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்.
கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களை இதுபோன்று பேசிவிட்டு அவர்கள் நடமாட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்தியா என்பது இந்தியா தான் பாரதம் என்பது பாரதம் தான் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.