கூட்டம் முடிவதற்குள் கரும்பு, வாழைகளை தூக்கிய திமுகவினர்… அமைச்சர் உதயநிதி பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
26 September 2023, 3:07 pm

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற செய்வீர்கள் கூட்டம் முடிவதற்குள் அமைச்சரை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த கரும்பு, வாழை காய்கள், பழங்களை திமுகவினர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஹள்ளியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவரை வரவேற்கும் விதமாக, கூட்டத்தின் நுழைவு வாயில் முன்பு வாழை மர தோரணங்கள், பல்வேறு பழவகை தோரணங்கள், இளநீர் தோரணங்கள், கரும்புகள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு உரையாற்றி பேசி முடிப்பதற்குள் கூட்டத்திற்கு வந்திருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் அமைச்சரை வரவேற்க வைத்திருந்த தோரணங்களில் இருந்த வாழை காய்களை கற்களை கொண்டு அறுத்தனர்.

மேலும், தங்களின் தோளில் சுமந்தவாறு கொண்டு சென்றதோடு மட்டும் இல்லாமல், இளநீர்களை உடைத்து அதை பருகியும், கரும்புகளை எடுத்து அதனை உடைத்து சாப்பிட்டும், வரவேற்பு வாயிலின் மேல்பகுதியில் இருந்த பழங்களை ஆபத்தான முறையில் மேலே ஏறி அதை பறித்து உண்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் பேசி கூட்டத்தை நிறைவு செய்வதற்குள் கட்சி நிர்வாகிகள் செல்லும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 323

    0

    0