வருமானவரி சோதனைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது… என் மீது FIR போட்டு இருக்கா..? உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

Author: Babu Lakshmanan
28 April 2023, 2:27 pm

வருமான வரித்துறை சோதனைகளால் திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- வருமானவரி சோதனைகள் எப்போதும் நடப்பது தான். ஒவ்வொரு வருடமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுமாதிரி தான் தற்போது நடக்கிறது. இதுபோனற் சோதனைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது. இதுவரை யாரையாவது கைது செய்துள்ளார்களா..?

என் மீது ஏதாவது எப்.ஐ.ஆர்.போட்டு இருக்கிறார்களா? தி.மு.க.வை யாரும் வாழ்த்துவதில்லை. அவ்வப்போது குற்றச்சாட்டு தான் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வகுப்பு எடுப்பது போல் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை பாதியில் நிறுத்தியதைப் பற்றி கேளுங்கள். அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பற்றி கேட்கிறீர்கள். அவர் பேசியதாகவே பல ஆடியோக்கள் வெளி வந்துள்ளன, என தெரித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!