பாஜக ரீல் அந்து போயிடுச்சு.. என்ன படம் போட்டு காட்டினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் ; அமைச்சர் உதயநிதி விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 5:07 pm

சில மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு முழுமையாக வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் கரூர் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவாக கரூர் பேருந்து நிலையம்  ரவுண்டான  அருகில் மாநில இளைஞரணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைச்சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் கூட்டத்தில் பேசியஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:- பெற்றோர்களின் எண்ணம் அறிந்து வெறும் வயிற்றில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிற குழந்தைகளுக்கு முதலமைச்சர் தரமான காலை உணவு திட்டத்தை அளித்திருக்கிறார் நமது முதல்வர். இந்தியாவிலேயே முதல்முறையாக நமது மாநிலத்தில் தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் மட்டும் 34,000 குழந்தைகள் இத்திட்டத்தினால் பயன்படுத்துகின்றனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் தகுதி படைத்த மகளிர் இன்று ரூபாய் 1000 தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த 8 மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்க்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆ.ராசா விரைவில் சிறை செல்வார்… தேர்தலுக்குப் பிறகு அவர் எங்கே இருப்பாரோ…? நீலகிரியில் இபிஎஸ் பிரச்சாரம்…!!!

கரூரில் மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் நபர்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர் இன்னும் சில மகளிருக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு முழுமையாக வழங்கப்படும்.

மோடி அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்ல பெயர் 29 பைசா. நாம் சரியாக ஒரு ரூபாய் கட்டுகின்றோம். அவர் நமக்கு தருகின்றது 29 பைசா மட்டுமே. பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால், அவர்களுக்கு மூன்று ரூபாய் வழங்கப்படுகிறது. நமக்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது.

10 வருடமாக நமது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு  வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வைக்கப்பட்ட ஒரே செங்கல் வைத்த ஒரு செங்கலையும் நான் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். பாரதிய ஜனதா ஆளுகின்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன.

மேலும் படிக்க: தமிழகத்தில் 2026ல் பாமக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும்.. இது சத்தியம் : அன்புமணி ராமதாஸ் சவால்!

ஆனால் தமிழகத்தில் இன்னும் வரவில்லை. மோடியின் குடும்பம் இடி, சிபிஐ, ஐடி, அதானி ஆகியோர் மோடியின் குடும்பம். நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறைகளையும் அதானி கையில் கொடுத்து விட்டார். உலக பணக்கார வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். அதானி ஏர்போர்ட், அதானி ரயில்வே ஸ்டேஷன், அதானி துறைமுகம், அதானி மின்சாரம் ஆகிய அனைத்தையும் தூக்கிக் கொடுத்து விட்டார்.

மோடிக்கு வர வேண்டிய கோபம், பாதம் தாங்கி பழனிச்சாமிக்கு வருகிறது. மேலும், நேற்று கரூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் படம் காமித்தாராம் பாதம் தாங்கி பழனிச்சாமி அவர்களே, என்ன படம் போட்டு காட்டினாலும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள், உங்களுடைய ரீல் அந்து போய் பல வருடங்கள் ஆகிறது, என்றார்.

இன்னும் பல்வேறு சாதனைகளை கூறி கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணிக்கு கை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?