காமெடி சேனல் மாதிரி பார்த்துட்டு போக வேண்டியது தான்… அதிமுக – பாஜக மோதல் குறித்து அமைச்சர் உதயநிதி கிண்டல்!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 4:12 pm

அதிமுக, பாஜக இடையே உள்ள உட்கட்சி பூசல் காமெடி சேனல் பார்ப்பது போல் பார்த்து செல்ல வேண்டியதுதான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஜைக்கா நிதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- அதிமுக பாஜக இடையே ஏற்படும் பிரச்சனை குறித்து கேட்டதற்கு, இதெல்லாம் நாடகம் எல்லாம் எல்லாரும் காமெடி பீசு தான், என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு, இப்போது தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. அங்கு போய் பாருங்கள், செங்கல் மட்டும் தான் இருக்கும். எய்ம்ஸ் குறித்து ரகசியத்தை சொல்லுங்கள் என கேட்டுள்ளேன், எனக் கூறினார்.

அதிமுக, பாஜக இடையே உக்கட்சி பூசல் அவர்கள் ஓப்பனாகவே மிரட்டுகின்றனர். இப்போது ஆய்வு செய்துள்ள மருத்துவமனை கொரோனா காலகட்டத்தினால் தாமதமாகியுள்ளது. அக்டோபர் மாதம் முழுமையாக முடிவடைந்து விடும். விரைவில் திறக்கப்படும், என கூறினார்.

அதிமுக பாஜக இடையே உட்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. இதைப்பற்றி பேசக்கூடாது. ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ