8 வழிச்சாலை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி…

Author: kavin kumar
21 January 2022, 9:43 pm

சென்னை : சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அது குறித்துக் கடிதம் எதுவும் மாநில அரசுக்கு எழுதவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்றுவரும் கால்வாய் பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் நெடுந்தூர கால்வாய் பணிகளை பார்வையிட்டு, சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விசாரித்து அதுகுறித்து கேட்டறிந்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது:- மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் 8 இடங்களில் கல்வெட்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஆணையின் அடிப்படையில் 4600 மீட்டர் நீர்வழி பாதையில், ரூபாய் 33 கோடி மதிப்பீட்டில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 6 மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும் எனவும், அடுத்த வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் இந்த பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். சாலை மேல் சாலை போடுவதால் வீடுகளில் மழை காலங்களில் நீர் புகும் அபாயம் உள்ளது. எனவே மில்லிங் முறையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள 11.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும், 30.71 கிலோ மீட்டர் நீளம் உள்ள வடிகால் கால்வாய் களையும், 34 சிறு பாலங்களையும் சீரமைக்க 268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டு, இந்த ஆண்டிற்குள் பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளோம். சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவான திருப்புகழ் தலைமை, அளித்த அறிக்கையை பரிந்துரைக்கு ஏற்றுக் கொண்டுள்ளோம். அந்த பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து பணிகளும் நடைபெறும். நெடுஞ்சாலை பொறுத்த வரை சென்னையில் 258 கிலோ மீட்டர் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது, அதன் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பொறுத்தவரை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை அந்த துறை சார்ந்த அமைச்சர் கே என் நேரு தலைமையில் சிறப்பாக செய்து வருகிறார். *சேலம் 8 வழி சாலை தொடர்பான வழக்கு உட்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது பணிகள் குறித்து மத்திய அரசுடன் எந்தவிதமான கடித போக்குவரத்தும் இல்லை. மத்திய அரசு கடிதம் அனுப்பும் வகையில் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர் அறிவுரையின் பேரில் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 10544

    0

    0