திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் ஒன்றிய கழக செயலாளர் முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உதயநிதி துணை முதல்வர் என்று ராஜா கண்ணப்பன் கூறிவிட்டு மறுத்தது கொடுத்த கேள்விக்கு, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை இந்த அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது இந்த கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற குழப்பத்தில் தான் திமுக தலைவர்களும் உள்ளனர். உதயநிதி துணை முதலமைச்சர் என்பது அந்த கட்சியில் அவரை விட நிறைய அனுபவம் உள்ளவர்கள் உள்ளனர் ஒருத்தர் அந்த பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவே அது அது வளர்ச்சி அல்ல .
எஃப்4 கார் பந்தயம் குறித்த கேள்விக்கு, கார் பந்தயம் அவசியமா என்று அதிமுகவும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்புகின்றனர் அதன் விளைவாக எத்தனை விபத்துகள் வந்தாலும் திமுக அரசு அதன் பொறுப்பு ஏற்க வேண்டும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் ஏற்படுகிறது எனவே அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இதற்காக தொழில் அதிபர்களிடம் பணம் பெறுவதாகவும் தொடர்ந்து செய்தி வருகிறது இந்த கார் பந்தயம் நிச்சயமாக நடக்காது அதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம் நடப்பதற்கு வாய்ப்பில்லை நடந்தாலும் மக்களுக்கு பயனில்லை.
வருங்காலங்களில் ஆண்களுக்கும் உரிமை தொகை வழங்குவது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறியது குறித்த கேள்விக்கு தேர்தல் நேரங்களில் என்ன வேண்டும் என்றாலும் அறிவிக்கலாம் ஆண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது எந்த அடிப்படையில் எத்தனை கண்டிஷன் என்பதை முதலே சொல்ல வேண்டும் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுத்தார்கள் 2 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் இருக்கும் இடத்தில் 1 லட்சத்து பத்தாயிரம் கார்டு பெண்களுக்கு தான் கொடுத்தார்கள் அப்படியே ஆண்களுக்கு உரிமை தொகை கொடுப்பதாக அறிவித்தாலும் கூட எவ்வளவு கடன் வாங்க போகிறார்கள் அதிமுகவை கேலி பண்ண இந்த அரசு அதைவிட பல மடங்கு கடன் வாங்கி உள்ளது வருமானத்தை காட்டாமல் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏமாற்று வேலை
பாஜக அரசு மெட்ரோ திட்டத்திற்காக தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு, எப்போதுமே மத்திய அரசு தமிழக அரசுக்கு அதிகமான நிதி ஒதுக்காது என்பதை எடப்பாடி யார் கூறிவிட்டார் அது பிஜேபி ஆக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி தமிழகத்தை ஓரவஞ்சமாகத்தான் பார்க்கிறார்கள். திமுக எம்பிகள் இதுகுறித்து முறையாக பாராளுமன்றத்தில் போராட்டங்களில் ஈடுபடவில்லை திமுக எம்பிகள் மத்திய அரசிடம் நமக்கான நிதியை கேட்டு பெறவில்லை என்றாலும் மத்திய அரசு செய்வது தவறு தான் என்பதில் அண்ணா திமுக உறுதியாக உள்ளது.
வக்பு வாரிய சட்ட மசோதாவுக்கு அதிமுகவின் நிலைப்பாடு, வக்பு வாரிய சட்டத்தை முழுமையாக எதிர்க்கிறோம் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று எங்களுடைய பொதுச்செயலாளர் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.
தமிழ்நாட்டில் காவலர்கள் இடமாற்றம் குறித்த கேள்விக்கு, இந்த அரசில் அரசு அதிகாரிகளை மாற்றுவது வாடிக்கையாக உள்ளது காலையில் எழுந்தவுடன் எந்த அதிகாரி எங்கு இருப்பார் என்று செய்தித்தாள்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் ஒரு நிர்வாகத்தை சீர்படுத் முடியாது. அனுபவம் இல்லாத மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளார்கள் இதனால் நிர்வாக சீர்கேடு தான் ஏற்படுகிறது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…
This website uses cookies.