பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் குவிந்த அமைச்சர்கள் : ஆளுநர் தமிழசையை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் ரங்கசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 9:49 pm

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மனக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கோவில் யானை லட்சுமியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து துணைநிலை ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கொண்டி மகிழ்ந்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu