அரசு பள்ளியில் அமைச்சர்கள் ஆய்வு : பள்ளி மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு கலந்துரையாடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 2:18 pm

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 26 அரசு தொடக்கப் பள்ளிகளை சார்ந்த 3,185 குழந்தைகள் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கூடுதலாக 21 அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் 26 நடுநிலை பள்ளிகள் என மொத்தம் 47 பள்ளிகளை சார்ந்த 5,517 குழந்தைகள் பயனடைய உள்ளனர்.

அதன்படி மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் 73 அரசு பள்ளிகளை சார்ந்த 8,702 குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

இந்நிலையில் நாராயணபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து, இன்று வழங்கப்பட்ட உணவின் தரத்தை அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அங்குள்ள மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 441

    0

    0