அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன்.. 18 வயது இளம்பெண் கொலை… நெல்லை டவுனை அதிர வைத்த 17 வயது சிறுவன்!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2023, 2:30 pm

அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன்.. 18 வயது இளம்பெண் கொலை… நெல்லை டவுனை அதிர வைத்த 17 வயது சிறுவனின் வீடியோ!

நெல்லை டவுனில் நேற்று முன்தினம் சத்யா என்ற 18 வயது இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ராஜேஷ் கண்ணன் என்பவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்வதற்கு முன்னர் அந்த சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பிளேடால் தனது கழுத்தையும் அந்த சிறுவன் அறுக்க முயற்சி செய்துள்ளான். போலீசாரை கண்டு ஓடும் போது சிறுவனை போலீசார் துரத்தி பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனின் உடலில் வேறு எங்கும் காயம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அந்த சிறுவனுடன் நடந்த சம்பவம் குறித்து கலந்துரையாடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் அந்த சிறுவனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறியும் போது காவல்துறையினரிடம் என்னை தூக்கிலிடுங்கள் பலமுறை அவளிடம் பேசி பார்த்து விட்டேன் எந்த பலனும் இல்லை அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன் என சொல்லும் காட்சிகளும் அதில் பதிவாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அந்த சிறுவனுடன் காக்கி உடையில் காவலர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறையினர் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்