கஞ்சா போதையில் சிறுவன் அட்டகாசம்… போலீசாரிடம் பாக்சிங் போட்டு ரகளை… அதிர்ச்சி வீடியோ காட்சி..!!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 1:37 pm

சென்னை அருகே கஞ்சா போதையில் போலீசாரிடம் பாக்சிங் போட்டு ரகளையில் ஈடுபட்ட சிறுவனின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரவள்ளூர் அருகே உள்ள ஜிகேஎம் காலனி 15வது தெருவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, உச்சகட்ட கஞ்சா போதையில் இருந்த அவர், பொதுமக்களை விரட்டியும், மிரட்டியும் ரகளை செய்து கொண்டார். மேலும், அங்கிருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, கழிவு நீரில் மூழ்கி வெளியே வந்தார்.

அந்த சமயம், அப்பகுதியில் ரோந்து வந்த பெரவள்ளூர் போலீசார், அந்த சிறுவனை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அந்த நபரோ, போலீசார் கெட்ட வார்த்தைகளில் திட்டியதுடன், பாக்சிங் வீரரை போல் ஆட்டம் போட்டு, அவர்களை தாக்கினார். இதனைப் பொறுமையாக பார்த்த போலீசார், அந்த சிறுவனை எதுவும் செய்யாமல், அவரது நண்பர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, நேற்று அதிகாலை 1 மணியளவில் சாலையில் மீண்டும் திரிந்த அந்த சிறுவன், அங்கிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை கட்டையால் அடித்து சேதப்படுத்தினார். இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அதீத போதையில் இருந்த அந்த சிறுவனை பிடித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, போலீசாரை தரக்குறைவாக பேசி சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்