கோவிலில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை… பூசாரியின் கோரமுகம் : கோவையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 11:02 am

கோவை காட்டூர் தொட்டராயர் பெருமாள் கோவில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ரமேஷ். இந்து அறநிலையத் துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மட்டும் பூசாரியாக பணியாற்றாமல், கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் பூஜை செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் கண்ணப் நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் பெரிய கோவிலிலும் பூஜை செய்து வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கோவிலுக்கு வந்த சிறுவனிடம், கோவிலில் வைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதில் உள்ள சிலர், காவல் துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அங்கு சென்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு உள்ள அந்த கோவில் கமிட்டியினர் கூடி பேசி, அங்கு பூஜை செய்ய வர வேண்டாம் என தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காட்டூர் தொட்டராயர் பெருமாள் கோவில் பணி செய்து வந்த பூசாரி ரமேஷ் என்பவரை, தற்காலிக பணியிட நீக்கம் செய்து உள்ளனர்.

பக்தர்கள் பயபக்தியுடன் பூஜைகள் செய்து இறைவனின் அருள் பெற கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்லுகின்ற நிலையில், கோவிலில் வைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பக்தர்களின் நம்பிக்கையையும், கோவிலின் புனிதத்தையும் கெடுக்கும் இது போன்ற கோவில் பூசாரிகள் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?