15 வயது சிறுமியின் உயிரை பறித்த பீட்சா, பர்கர் : துரித உணவு காரணமா?!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2024, 12:09 pm

கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த மைல்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவரது 15வயது மகள் எலினா வீட்டின் அருகே அமைந்துள்ள PEEPAL PRODIGY SCHOOL தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

கடந்த 8 முதல் 15ஆம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக பள்ளியை சேர்ந்த 25 மாணவ மாணவிகளுடன் பள்ளி சார்பில் போட்டிக்கு சென்றதாக தெரிகிறது.

அங்கு பீட்சா மற்றும் பர்கர் போன்ற துரித உணவுகள் ஆர்டர் செய்து சாப்பிடப் பட்டதாக கூறப்படுகிறது. அதில் எலினாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் நீண்ட தூர பயணம், உடல் அசதி காரணமாகும் உணவு உடலுக்கு ஏற்றுக்கொள்ளாமல் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எலினாவின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். மைல்கல் பகுதியில் எலினாவுக்கு பல்வேறு இடங்களில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை என்ற பகுதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக எலினாவின் வீட்டிற்கு அக்கம் பக்கத்து வீட்டாரை விசாரித்தபோது முழுமையான தகவல்கள் தெரியவில்லை என தெரிவித்தனர்.

School Girl Dead Due to Ate Junk Foods

பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கு விடுமுறை அளித்திருப்பதாகவும் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் முழு தகவலையும் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

(இந்த மாணவி ரயிலில் பயணித்த போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக கூறப்பட்ட நிலையில் IRCTC நிர்வாகம் தங்கள் உணவு பட்டியலில் சிக்கன் ரைஸ் கிடையாது என மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது)

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 265

    0

    0