சேலம் ;சேலத்தில் திருமணமாகாத சிறுமி பிரசவத்துக்கு பிறகு உயிரிழந்தது தொடர்பாக பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் மருத்துவர் செல்வாம்பாள். இவர், திருமணமாகாமல் கர்ப்பமான 17 வயது சிறுமிக்கு பிரசவம் பார்த்தார். அந்த சிறுமிக்கு குறைபிரசவம் ஆனது. அப்போது சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சிறுமிக்கு பிறந்த குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்கள் இல்லாத பகுதியில் வீசப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி பெண் மருத்துவர் செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு கடந்த 3 நாட்களாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு பெண் மருத்துவர் மோகனம்பாள் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
This website uses cookies.