பென்சில் வாங்கச் சென்ற 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : ஸ்டேஷனரி கடைக்காரர் கைது செய்து விசாரணை..!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 4:06 pm

கரூர் அருகே 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஸ்டேஷனரி கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்க சென்றுள்ளார்.

அப்போது ஸ்டேஷனரி கடையை நடத்திவரும் நடராஜன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடையை அடித்து நொறுக்கி உள்ளனர். அதனை தொடர்ந்து வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வெள்ளியணை போலீசார் நடராஜனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!