6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 48 வயதான நபர் போக்சோவில் கைது ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Author: Babu Lakshmanan
14 February 2023, 8:38 am

மதுரை மாவட்டத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 48 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த ஆறு வயது சிறுமியை 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பாஸ்கரன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பு, ஆறு வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 48 வயதான சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பதற்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பாஸ்கரனுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் எதிர்ப்பு தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றி நீதிமன்றத்தில் துரிதகரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திருமதி கிரிஸ் சோபியா பாய் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் கவிதா ஆகியோரை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 413

    0

    0