குடும்பத்தினருக்கு பாலில் தூக்க மாத்திரை… இரவில் காதலனுடன் 15 வயது சிறுமி உல்லாசம் ; சென்னையில் பகீர் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 9:27 pm

தனது காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக தனது குடும்பத்தினருக்கு 15 வயது சிறுமி பாலில் தூக்க மாத்திரை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமி, மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால், அந்த வாலிபரை அவர்களின் குடும்பத்தினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி படிக்கும் பள்ளியின் அருகில் அந்த இளைஞர் இருப்பதைக் கண்ட சிறுமியின் உறவினர், அவருடன் சண்டையிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையம் வரை சென்றதால், சம்பவ இடத்திற்கு நொளம்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வாலிபரையும், சிறுமியின் உறவினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி போலீசாருக்கும், சிறுமியின் உறவினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தனது தாய், பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி இரவு நேரங்களில் இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து நன்றாக தூங்க வைத்த பிறகு, சிறுமியுடன் அந்த வாலிபர் உல்லாசமாக இருப்பது தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு காதலனே தூக்க மாத்திரைகளை வாங்கி கொடுத்திருப்பதாகவும், செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ