8 வயது சிறுமிக்கு 70 வயது முதியவர் பாலியல் தொல்லை… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.. போலீஸார் செயலால் பெற்றோர் வேதனை!!
Author: Babu Lakshmanan20 March 2023, 3:56 pm
தூத்துக்குடி அருகே 8 வயது சிறுமிக்கு 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு அளித்ததில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியை சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சூசைமிக்கேல் என்ற 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதில் அந்த 8 வயது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தூத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தருவைகுளம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பினர் புகார் அளித்தும், அதனை கண்டுகொள்ளாத காவல்துறை அலட்சியம் காட்டி வருவதாக சிறுமியின் தரப்பினர் கடுமையாக குற்றம்சாட்டினர்.