காதலிப்பதாகக் கூறி சிறுமியை கர்ப்பாக்கிய நபர் கைது ; சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்ததாகப் புகார்..!!
Author: Babu Lakshmanan27 January 2024, 5:58 pm
அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலசம்போடை கிராமத்தை சேர்ந்தவர் அன்புத்துரை. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தியுள்ளார்.
தற்போது அந்த சிறுமி மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அன்புத்துரையிடம் திருமணம் செய்து கொள்ள கேட்டபோது சாதியை காரணம் காட்டி மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அந்த சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தன்னை காதலிப்பதாக கூறி கர்ப்பமாகியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து அன்புதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.