15 வயது சிறுமி TO 8 மாத கர்ப்பிணிக்கும் பாலியல் தொல்லை… கொலை மிரட்டல் விடுத்து காரியத்தை சாதித்த பாதிரியாருக்கு வேட்டு..!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 1:42 pm

தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டை கிராமத்தில் ஆசிர்வாத சகோதர சபை என்ற பெயரில் பெந்தேகோஸ்து தேவாலயம் உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் ஜோஸ்வா (40) என்பவர் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்துள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமிக்கு தொந்தரவு செய்துள்ளார். சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், இது வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் மேற்படி சிறுமி வெளியே தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த வருடம் திருமணம் ஆகி தற்போது அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவரது செல்போனுக்கு whatsapp மூலம் பாதிரியார் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வைத்து கைது செய்து, கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில், பாதிரியார் கர்ப்பிணி பெண்ணுக்கு 15 வயதில் இருந்தே பாலியல் தொல்லை அளித்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து, பாதிரியார் வினோத் ஜோஸ்வா மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி