சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை… கோவை போலீசாரை அதிர வைத்த இளைஞர்..!!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2025, 12:40 pm
கோவையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கோவையில் கைது செய்தனர் காவல் துறையினர்.
இதையும் படியுங்க: புனிதமான திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் செய்த அநாகரீகமான செயல்.. போலீசார் ஆக்ஷன்!
திருநெல்வேலி, அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த சந்தானம், இவர் சூலூரில் உள்ள ஜெயராணி என்ற உணவகத்தில் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவர் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 15 வயது சிறுமிக்கு காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 15 ஆம் தேதி அந்த சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
சிறுமி காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், சந்தானத்தை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.