15 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரத் தாய்… அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2025, 2:28 pm

கள்ளக்காதலனுக்கு தனது 15 வயது மகளை விருந்தாக கொடுத்துள்ள கொடூரத் தாயின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பகுதியில் தாய், தந்தையுடன் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.

தாய்க்கு 30 வயது கள்ளக்காதலனுடன் தொடர்பு இருந்து வந்தது. ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டுக்கு வர, அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியை பார்த்ததும் ஆசை துளிர்த்துள்ளது.

இதையும் படியுங்க : 65 வயது முதியவருக்கு 103 ஆண்டு சிறை… கொண்டாடும் மக்கள்.. என்ன காரணம்?!

இதையடுத்து அந்த பெண்ணிடம் அனுமதி பெற்று, 15 வயது சிறுமியை நாசம் செய்துள்ளான் அரக்கன். துடிதுடித்து கதறிய சிறுமியிடம் வெளியில் இது பற்றி கூறினால் உன் தாய், தந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி வாயடைத்து நின்றாள். தட்டிக் கேட்க வேண்டிய தாய், பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார்.

இந்த நிலையில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Minor Girl Sexually Raped by Mothers Illegal Boy Friend

இதையடுத்து தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே பாலியல் இச்சைக்கு தள்ளிவிட்ட தாயின் கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி