பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததால் தீக்குளிப்பு… வீடு திரும்பிய சிறுமி திடீர் தற்கொலை ; பகீர் கிளப்பும் பின்னணி..!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 2:18 pm

திருவள்ளூர் ; 5 இளைஞர்களின் கூட்டு பலாத்கார அச்சுறுத்தல் காரணமாக தீக்குளித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே 5 இளைஞர்களின் கூட்டு பாலியல் பலாத்கர அச்சுறுத்தல் காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொண்ட சிறுமி, 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின், குணமாகி தனது குடும்பத்தின் அரவணைப்பில் வசித்து வந்தார்.

இந்த வழக்கில் திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி, அஜித்குமார், அஜித், பரத், மோகன் என்ற ராகுல் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தந்தையுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்த சிறுமி, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிறுமி தூக்கிட்டு உயிரை மாய்த்துகொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலியல் கூட்டு பலாத்கார முயற்சியால் தீக்குளித்த சிறுமிக்கு அரசு நிவாரண நிதி வழங்கிட வேண்டுமென தமிழர் முன்னேற்ற படை கட்சி நிறுவன தலைவர் வீரலட்சுமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும். சிறுமி விஜய் ரசிகர் என்பதால் அவருக்கு நடிகர் விஜய் உதவிட வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.

அதை ஏற்று விஜய் ரசிகர் மன்றம் மூலம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், 50 ஆயிரம் ரூபாய் அளித்தார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோரும் உதவினர். இந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிறுமி உயிரை மாய்த்து கொண்டார்.

பெண்ணலூர் பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, மருத்துவர்களின் உடற்கூறு ஆய்வுக்குப் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!