மலையில் அதிசய புதையல்? கூடாரம் போட்டு தங்கிய கும்பல் : வேலூரில் அடுத்த பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2025, 10:36 am

வேலூர் அடுத்த அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 1500 அடி உயரம் உள்ள மலை பகுதி உள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் சிவன் கோவில் உள்ளது

இந்த கோவிலில் புதையல் இருப்பதாக சுற்றியுள்ள பகுதியினரால் அரசல் புரசலாக பேசப்பட்டு வருவது வாடிக்கையாகயிருந்த நிலையில் அந்த மலையின் மேல் உள்ள பாழடைந்த கோயில் சுவர்களில் உள்ள கற்களை யாரோ உடைப்பதாக அங்கு கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்ததும் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு தகவல் சென்றது.

இதையும் படியுங்க: பட்டுக்கோட்டை பள்ளி மாணவி உயிரிழப்பு.. பெற்றோர் திடீர் வாதம்!

இதனை அடுத்து இளைஞர்கள் மலையின் மேல் சென்று அங்கு கோவிலின் அருகே உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து மேலும் அக்கோயில் சுவர் அருகே சாரங்களைக் கட்டி அங்கிருந்த மலை கற்களை உடைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்களை இளைஞர்கள் நெருங்கி வருவதை கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். விடாது துரத்திச் சென்ற இளைஞர்கள் அவர்களை அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்

பின்னர் இளைஞர்கள் அவர்களிடம் விசாரித்தபோது அந்த மர்ம நபர்கள் அனைவரும் முன்னுக்குப் பின் முரணாக ஏதேதோ கூறியுள்ளனர்

தொடர்ந்து அந்த இளைஞர்கள் விசாரிக்கையில் சிலர் பாண்டிச்சேரி சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என மாறி மாறி பதிலளித்துள்ளனர். தொடர்ந்து விசாரிக்கையில் வேலூர் கந்தனேரி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் தான் தங்களை அழைத்ததாக கூறியுள்ளனர்.

mysterious treasure

மேலும் அந்த மர்ம நபர்கள் அங்கு கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்ததும் அவர்களிடம் பாறைகளை உடைக்க வைத்திருந்த மண்வெட்டி, உளி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.

மேலும் அப்பகுதிக்கு சிவநாதபுரம் இளைஞர்கள் ஒரு சிலரே சென்றதால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்த மர்ம நபர்கள் சென்று விட்டுள்ளனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை

Vellore Treasure

இது குறித்து இந்து அமைப்பினர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளனர் புகாரின் பிறகு அங்கு தங்கி இருந்த மர்ம நபர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எதற்காக வந்து இங்கு கூடாரம் போட்டு தங்கி இருந்தனர் என்பது முழு விசாரணைக்குப் பிறகு உண்மை தன்மை தெரிய வரும் என போலீசார் மற்றும் வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது

புதையலைத் தேடி மலை மீது ஒரு கும்பல் கூடாரம் அமைத்து தங்கி இருந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply