காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவி.. மும்பைக்கு கடத்தி சென்ற இளைஞர் : போலீசார் விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 5:23 pm

சங்கராபுரம் அருகே 11 ஆம் வகுப்பு சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி ஒருவரின் மகள் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

16 வயதுடைய அந்த மகள் திடீரென காணவில்லையன சங்கராபுரம் காவல் நிலையத்தில் அந்த விவசாயி புகார் அளித்தார். புகாரின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடம் சந்தேகத்தின் பெயரில் சங்கராபுரம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபு என்பவர் 16 வயதுடைய சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்றதாக தெரியவந்தது.

சங்கராபுரம் காவல்துறையினர் மும்பை மலாடு பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை மடக்கிப் பிடித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் சிறுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 524

    0

    0