காணாமல் போன 16 வயது சிறுமி… கடத்தி சென்ற காதலன்? அதிர வைத்த சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 10:44 am

கோவை மாவட்டம் சூலூர் நூர்பாலையில் தங்கி வேலை பார்த்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற காதலனை சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள தனியார் நூற்பாலையில் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவரது சகோதரருடன் ஊருக்கு செல்ல வந்த போது திடீரென காதலனுடன் சென்று மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை அந்தப் சிறுமி மற்றும் அவருடைய காதலன் பவானியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (24) என்பவரையும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு கட்டுமான இடத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் 16 வயது சிறுமையை கணபதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். காதலன் தாமரைக் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அண்ணனுக்கு போக்கு காட்டி விட்டு பைக்கில் தப்பிச்சென்ற சிறுமியின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 405

    0

    0