HAPPY இல்லாம நாங்க HAPPY-ஆ இல்ல.. நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் : திருப்பூர் நகரத்தில் வலம் வரும் போஸ்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 2:11 pm

நாய் காணவில்லை கண்டறிபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

திருப்பூர் ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவ். இவர் பெல்ஜியம் மெலினாய்ஸ் வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். உயர்ரக நாய் என்பதால் அதிக பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் காணவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த தேவ் நாய் காணவில்லை எனவும் கண்டறிந்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என திருப்பூர் மாநகர் முழுவதும் 500 போஸ்ட்ர்கள் ஒட்டி தேடி வருகிறார்.

நாய் காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!