காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட மகள்.. வைரலான அதிர்ச்சி வீடியோ : பதறிய பெற்றோர் அளித்த பகீர் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 9:33 pm

காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட மகள்.. வைரலான அதிர்ச்சி வீடியோ : பதறிய பெற்றோர் அளித்த பகீர் புகார்!

திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித்தொழிலாளியான இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் மூத்த இரண்டு பெண்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் வேலுச்சாமி தனது மகன் குடும்பத்தினர் மற்றும் திருமணமாகாத சற்று மனநிலை பாதிக்கப்பட்ட கடைசி பெண் பிள்ளையான தங்கமணி (30) உடன் வசித்து வருகிறார்.

இதனிடையே கடந்த 6ஆம் தேதி வீட்டிலிருந்த தங்கமணி மாயா மானதாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கமணிபின் குடும்பத்தார் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,கடந்த 8ந் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தங்கமணியிடம், போலீசார் விசாரணை நடத்துவது போல வீடியோக்கள் தனது மகனின் செல்போனுக்கு வந்ததால் இது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, கொடுவாய் அருகே உள்ள நிழலிகவுண்டம்பாளையத்தில் சுற்றித்திரிந்த தங்கமணியை சந்தேகத்திற்கு இடமாக பிடித்து பொதுமக்கள் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், இதனை தொடர்ந்து காங்கேயம் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது திருப்பூரில் உள்ள காப்பகத்தில் தங்கமணியை ஒப்படைத்துவிட்டதாக தங்கமணியின் குடும்பத்தாரிடம் காங்கேயம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஜார்க்கண்ட முதலமைச்சருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை? சைலண்ட் ஆன அமலாக்கத்துறை.. நீதிமன்றம் ரியாக்ஷன்!

இதனிடையே பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் தங்கமணி செல்வது பதிவாகியுள்ளதாகவும் விரைந்து கண்டுபிடிக்கப்படுவார் என்றும் அதேபோல் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தங்கமணியின் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 324

    0

    0