காணாமல் போன அமைச்சர்… ஒரு வேளை கண்டுபிடித்தால் கள்ளக்குறிச்சி பிரச்சனையை கவனிக்க சொல்லவும் : அதிர வைத்த சூர்யா சிவா!!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2022, 12:21 pm
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக கரூரை சேர்ந்த 4 இளைஞர்களை இன்று கைது செய்துள்ளனர். வன்முறை குறித்து சமூக வளைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் 4 பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவின் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அரசியில் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், அமைச்சர் அன்பில் மகேஷை காணவில்லை, கடைசியாக அவரை பார்த்த இடம் திரைப்பட நிகழ்ச்சிகளில்.. ஒரு வேளை அவரை கண்டுபிடித்தால் கொஞ்சம் இலாக்காக வேலையை அதுவும் கள்ளக்குறிச்சி வேலையை கவனிக்க சொல்லவும் என ட்விட்டரில் பதிவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டேக் செய்துள்ளார்.
அண்மையில் கைது செய்யப்பட்ட சூர்யா சிவா தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகினார்.