காணாமல் போன நபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு : கல்லைக் கட்டி கொலை? விசாரணையில் பரபரப்பு திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 3:14 pm

உடலில் கல் கட்டிய நிலையிலும்,வெட்டு காயங்களும் உள்ளதால் கொலையா என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.

இவரது சகோதரர் கந்தசாமி திருச்சியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கந்தசாமி வீடு திரும்பவில்லை. இது குறித்து ரேணுகா தேவி அன்று இரவு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் அவரப்பாளையம் பகுதியிலுள்ள குட்டை அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று வயிற்றில் கல்லை கட்டிய நிலையில் மிதப்பதாக அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு இன்று தகவல் அளித்தனர்.

தகவலறிந்த சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் கிணற்றில் மிதந்த சடலம் கந்தசாமி என்பது தெரியவந்தது. காணாமல் போன கந்தசாமியின் சடலம் கிணற்றில் கிடந்துள்ளது.

மேலும் கந்தசாமியின் உடலில் வெட்டு காயங்கள் உள்ளதால் கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் போட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 771

    0

    0