தமிழகம்

டீக்கடையில் ஸ்டாலின்.. 20 இடங்களில் தேங்கிய மழைநீர்.. தத்தளிக்கும் சென்னை

சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றிய மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை வரை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மதியம் 12 மணி நிலவரப்படி, சென்னையின் 20 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட 5 இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, காலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வெள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் உடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்கின்றனர்.

அதேபோல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள், தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட மின்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும், சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நேற்றைய அறிவிப்பில் சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

6 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

7 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

8 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

9 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

12 hours ago

This website uses cookies.