முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 1:15 pm

தமிழக முதலமைச்சரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறபதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க: அத்தையுடன் மெத்தையில் எல்லை மீறிய மருமகன் : ஆசைக்காக நடந்த விபரீதம்!

பாமக நிறுவனர் ராமதாசுக்கு அறிக்கை விடுவது தான் அவருக்கு வேறு வேலை இல்லை என தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள விழுப்புரம் புதுச்சேரி சாலையில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மறியலில் ஈடுபட வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்ததை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர்.

PMK Executives Arrest for Protest Against CM

இதனையடுத்து முற்றுகையிட்ட சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.

PMK Mla Arrest

அப்போது தமிழக முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் தமிழக முதலமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் 29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறப்பதற்கு வருகை தரும் முதல்வருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்போம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 192

    0

    0